கடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம்


கடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 27 Jun 2020 1:36 AM GMT (Updated: 27 Jun 2020 1:36 AM GMT)

கடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம் பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை.

கடத்தூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் முககவசம் அணியவேண்டும் என்று கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்தநிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், உதவியாளர் மோகன், பணியாளர்கள் செந்தில், மாதன் மற்றும் போலீசார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். வாகனங்களில் செல்லும் போது முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரித்தார்.

Next Story