28 போலி டாக்டர்கள் கைது; சிகிச்சை மையங்களுக்கு சீல் ராணிப்பேட்டை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கழிவறை வழியாக சென்று சுவர் ஏறிக்குதித்து தப்பியவர் உள்பட 28 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடத்திய சிகிச்சை மையங்கள் சீல் வைப்பட்டன.
பனப்பாக்கம்,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி டாக்டர்கள் சிகிச்சை மையம், மருத்துவமனை நடத்துவதாக வந்த புகாரின்பேரில் ராணிபேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல் துறையினரை கொண்ட 5 குழுவினர் தனித்தனியாகச் சென்று பல்வேறு சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
நெமிலி தாசில்தார் ரேவதி தலைமையில், சுகாதாரத்துறை அலுவலர்கள் பனப்பாக்கத்தில் உள்ள ஒரு சிகிச்சை மையத்துக்கு ஆய்வு செய்ய சென்றனர். அதிகாரிகள் வருவதை, அறையில் இருந்தபடியே கண்காணிப்புக் கேமரா மூலம் பார்த்த அருள்தாஸ் என்பவர் அதிகாரிகள் உள்ளே வந்தால் டாக்டர் கழிவறை சென்றிருப்பதாக சொல்ல வேண்டும் என அங்கிருந்த உதவியாளரிடம் கூறி விட்டு கழிவறைக்குள் சென்று, அதற்குள் இருந்த மற்றொரு வழியாக வெளியேறி, சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடி விட்டார்.
அங்கு, அரை மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள் டாக்டர் வராததைக் கண்டு கழிவறை கதவை உடைத்துப் பார்த்தபோது, அதற்குள் இருந்த மற்றொரு கதவு வழியாக டாக்டர் தப்பி சென்றது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள், அந்தச் சிகிச்சை மையத்தில் சோதனைச் செய்தபோது, அருள்தாஸ் ஓமியோபதி படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் அளித்து வந்தது தெரிந்தது. இதையடுத்து மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சிகிச்சை மையத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.
அதிகாரிகள், அருள்தாசை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, தான் நெமிலி போலீஸ் நிலையத்துக்கு வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். அதிகாரிகள், போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்டு அருள்தாஸ் அங்கு உள்ளாரா? எனக் கேட்டு உறுதி செய்து கொண்டு நெமிலிக்கு வந்தனர். அங்கு அவரை போலீசார் கைது செய்தனர். அவர், ஏற்கனவே 2 முறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெமிலி
அதேபோல் அதிகாரிகள், நெமிலியில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர்களான பண்டரிநாதன், திருமால்பூர் கிராமத்தில் அண்ணாமலை, காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைத்தாங்கி கிராமத்தில் ஜெயபாலன் ஆகியோரை கைது செய்து சிகிச்சை மையங்களுக்கு சீல் வைத்தனர். இதேபோல கலவை, ஆற்காடு, சோளிங்கர் என மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த அதிரடிச் சோதனையின்போது மொத்தம் 28 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடத்திய41 சிகிச்சை மையங்கள் சீல் வைக்கப்பட்டது. போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக யாரேனும் செயல்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Tags :
Next Story