தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் பேட்டி + "||" + In the present situation in Tamil Nadu, it is not possible to open schools, Interview Minister
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
நாமக்கல்,
குமாரபாளையம் எக்ஸல் கன்வென்சன் சென்டரில் நேற்று கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பெஞ்ச்-டெஸ்குகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மருத்துவமனைகளுக்கு மனிதநேயத்தோடு தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை. சூழ்நிலை மாறும்போது எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பதை கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்-லைன் வகுப்புகள்
தொடர்ந்து ஆன்-லைன் வகுப்புகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளதா? என நிருபர்கள் கேட்டதற்கு, பொறுத்து இருந்து பாருங்கள், இன்னும் ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று அறிவிப்பேன் என்றார்.
இந்த பேட்டியின்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இஸ்லாமியர்களின் உரிமைகளை அ.தி.மு.க. அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று ஜமாத் நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
‘பாளையங்கோட்டை மார்க்கெட்டில் கடைகளை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது. வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டால் போராட்டம் நடத்தப்படும்’ என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.