நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற வாலிபர் கைது


நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2020 4:15 AM IST (Updated: 30 Jun 2020 1:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை மர்மநபர்கள் 2 பேர், இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால், அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இதுகுறித்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மேற்பார்வையில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (வயது 25) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்ததை விக்னேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து விக்னேசை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story