வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிக சந்தையில் மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் தீவிரம்
வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிக சந்தையில் மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு,
ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை தற்போது ஈரோடு பஸ் நிலையத்தில் இயங்கி வருகிறது. இங்கிருந்து விரைவில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு சந்தை இடம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக மைதானத்தில் 720 பேர் கடைகள் அமைக்கும் வகையில் கூரையுடன் கூடிய மேடைகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து உள்ளன. இங்கு கடை அமைக்கும் ஒவ்வொரு வியாபாரியும் அவரவர் கடை தராசு மற்றும் மின் விளக்குகள், மின் விசிறிகளுக்கு தனித்தனியாக மின் இணைப்பு பெறும் வகையில் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நேற்று இறுதி கட்ட பணிகள் மிகவும் தீவிரமாக நடந்தன.
பஸ் நிலையத்தில் சந்தை செயல்படுவதால் நெரிசலை தவிர்க்கும் வகையில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் சில்லரை விற்பனை தடை செய்யப்பட்டு இருக்கிறது. மொத்த வியாபாரமும் காலை 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே விரைவில் வ.உ.சி. பூங்கா மைதானம் தற்காலிக சந்தையை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Tags :
Next Story