பூந்தமல்லியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு
பூந்தமல்லியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபானங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
பூந்தமல்லி,
கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் மதுபிரியர்கள் பரிதவித்தனர். இதை பயன்படுத்தி சிலர் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்று மொத்தமாக மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று வந்தனர்.
இந்த நிலையில் பூந்தமல்லியில் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் டாஸ்மாக் கடையின் இரும்பு ஷட்டரில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்று மதுபானங்களை திருடியது தெரிந்தது. ஆனால் எவ்வளவு மதுபானங்கள் திருடுபோனது என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story