காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாமுண்டீஸ்வரி பதவி உயர்வு பெற்று காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் சரகத்தில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரவுடிகளும் கைது செய்யப்படுவார்கள். இதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் காவல் மாணவர் படை, போலீஸ் நண்பர்கள் குழு போன்றவை விரிவுபடுத்தப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் தவறான வழியில் செல்வது தடுக்கப்படும்.
இந்த 3 மாவட்டங்களிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஊரடங்கையொட்டி திருமணம், இறுதி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகமான கூட்டம் சேர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் காஞ்சீபுரத்தில் 31 பேர், செங்கல்பட்டில் 20 பேர், திருவள்ளூரில் 23 பேர் என மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 மாவட்டங்களிலும் ஊரடங்கின் போது விதிகளை மீறியதாக 85 ஆயிரத்து 758 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 71 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story