பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உடல் அடக்கம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி


பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உடல் அடக்கம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி
x
தினத்தந்தி 8 July 2020 6:11 AM IST (Updated: 8 July 2020 8:52 AM IST)
t-max-icont-min-icon

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.

புதுச்சேரி,

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் (வயது 92) நேற்று முன்தினம் புதுவையில் மரணமடைந்தார். நேற்று காலை அவரது உடல் பெருமாள் கோவில் வீதியில் உள்ள பாரதிதாசன் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் சுந்தரேசன், இயக் குனர் வினயராஜ் மற்றும் அதிகாரிகள், தமிழறிஞர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

நேற்று மாலையில் மன்னர் மன்னனின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோவில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Next Story