கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: புதிதாக 32 பேருக்கு தொற்று


கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: புதிதாக 32 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 8 July 2020 7:41 AM IST (Updated: 8 July 2020 8:50 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் புதிதாக 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளதாக சுகா தாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரி வித்தார்.

புதுச்சேரி, 


புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் மாநில அரசு, சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று 498 பேருக்கு புதிதாக உமிழ்நீர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் புதுச்சேரியில் 30 பேரும், மாகி யில் 2 பேரும் என மொத்தம் 32 பேர் புதிதாக கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 37 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ள னர். அதாவது புதுச்சேரியில் 35 பேரும், காரைக்காலில் 2 பேரும் குணமடைந்துள்ள னர். நேற்றைய பாதிப்பில் 18 வயதுக்குட்பட்டவர்கள் 5 பேரும், 18 வயது முதல் 60 வயதுக்குள் 25 பேரும், 60 வயதுக்கு மேல் 2 பேரும் அடங்குவர். இவர்களில் 20 பேர் ஆண்கள், 12 பேர் பெண் கள் ஆவார்கள்.

புதுவையில் ஒட்டுமொத்த மாக 21 ஆயிரத்து 382 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 172 பேருக்கான பரி சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

புதுவை மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,041 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். அவர்களில் தற்போது 510 பேர் சிகிச்சையில் உள்ளனர். 517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சையில் இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. கொரோனாவால் இதுவரை 14 பேர் உயிரிழந் துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story