போலி இ-மெயில் முகவரியை நம்ப வேண்டாம் பொதுமக்களுக்கு, போலீஸ் அதிகாரி அறிவுறுத்தல்
கொரோனா காலத்தில் அனைவரும் செல்போனில் மூழ்கி உள்ளனர். இந்த நேரத்தில் போலி இ-மெயில்கள் மீண்டும் வலம் வர தொடங்கி உள்ளது.
நெல்லை,
நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம் ஒழுங்கு) சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காலத்தில் அனைவரும் செல்போனில் மூழ்கி உள்ளனர். இந்த நேரத்தில் போலி இ-மெயில்கள் மீண்டும் வலம் வர தொடங்கி உள்ளது. இவை 100 சதவீதம் போலியானவை. மோசடியானது. எனவே பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும். கவனமாக இல்லாவிட்டால் உங்களது பணத்தை இழக்க நேரிடும். அமெரிக்காவில் இருந்து உங்களுக்கு பல கோடி ரூபாய் அனுப்பி உள்ளேன். அதனை இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள். எனவே இந்த இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் என்று போலியான குறுந்தகவல்கள் வருகின்றன. அதாவது இதுபோன்ற mrsgraceadams92gmail.com இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளுமாறு குறுந்தகவல்கள் செல்போன்களுக்கு அனுப்பப்படுகிறது. அமெரிக்காவில் ஏழைகளே இல்லையா?. எனவே போலி இ-மெயில் முகவரிகளை பொது மக்கள் நம்ப வேண்டாம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story