தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,297 ஆக அதிகரிப்பு


தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,297 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 July 2020 6:21 AM IST (Updated: 9 July 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 1,225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 72 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதன்படி, உத்தமபாளையத்தை சேர்ந்த கல்லூரி முதல்வர், அவருடைய மனைவி உள்பட உத்தமபாளையம் பகுதியில் 9 பேருக்கும், போடி பகுதியில் 18 வயது இளம்பெண் உள்பட 10 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

1,297 ஆக உயர்வு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இ-பாஸ் வழங்கும் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர், பழனிசெட்டிபட்டியில் கர்ப்பிணி உள்பட தேனி ஒன்றிய பகுதிகளில் 8 பேருக்கும், கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெண் உள்பட 3 பேருக்கும், பெரியகுளம் ஒன்றியத்தில் தென்கரை, வடுகப்பட்டி, சில்வார்பட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம், டி.கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 23 பேருக்கும், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியர் மற்றும் க.விலக்கு, ஜக்கம்பட்டி பகுதிகளை சேர்ந்த 9 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கூடலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் கம்பத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு உள்பட கம்பம் ஒன்றியத்தில் 8 பேருக்கும், சின்னமனூரில் 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது.

Next Story