சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2020 1:37 AM GMT (Updated: 9 July 2020 1:37 AM GMT)

சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சோளிங்கர், 

சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜி.வி.கே. நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

நாங்கள் தினமும் 12 மணி நேரத்துக்குமேல் வேலை பார்க்கிறோம். எங்களுக்கு உணவு இடைவேளை இல்லை. கூடுதல் பணிச்சுமை உள்ளது. உயிர் காக்கும் சேவையே உன்னத சேவை என உழைத்து வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் தாலுகா பகுதியில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் நாங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பி.எல். விடுப்புக்கு வழங்கிய தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஜி.வி.கே. நிர்வாகம் வழங்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் ரேடியேட்டர் ஊழலை மறைக்க சட்டப்படி விசாரணை நடத்தாமல், 6 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததைக் கண்டிக்கிறோம். உள் விசாரணை மேற்கொள்ளாமல் சட்டவிரோதமாக பல ஊழியர்களை தண்டனையாக சென்னைக்கு பணியிட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும். ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள், முகக் கவசம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story