கூத்தாநல்லூரில் தாசில்தார், 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொரோனா; தாலுகா அலுவலகம் மூடப்பட்டது


கூத்தாநல்லூரில் தாசில்தார், 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொரோனா; தாலுகா அலுவலகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 10 July 2020 11:57 AM IST (Updated: 10 July 2020 11:57 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூரில் தாசில்தார் மற்றும் 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 27 வயதுடைய கூத்தாநல்லூர் கிராம நிர்வாக அலுவலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் தற்போது ஜமாபந்தி நடந்து வருகிறது.

இதையடுத்து அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில் கூத்தாநல்லூர் தாசில்தாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 27 வயதுடைய புள்ளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர், 26 வயதுடைய பழையனூர் கிராம நிர்வாக அலுவலர், 28 வயதுடைய பொதக்குடி கிராம நிர்வாக அலுவலர், 28 வயதுடைய வக்ராநல்லூர் கிராம நிர்வாக அலுவலர், 29 வயதுடைய நாளில் ஒன்று கிராம நிர்வாக அலுவலர், 28 வயதுடைய கிளியனூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று கூத்தாநல்லூர் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் லதா உத்தரவின் பேரில் சுகாதார பணியாளர்கள் தாலுகா அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

Next Story