மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2020 4:50 AM IST (Updated: 11 July 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

தரமான சாலை அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழனி,

பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் தரமான சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய ஆயக்குடி போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தரமான சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story