தரங்கம்பாடியில், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்; போலீஸ் இன்ஸ்பெக்டரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு
சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி தரங்கம்பாடியில், மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த தள்ளு முள்ளுவின்போது போலீஸ் இன்ஸ்பெக்டரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொறையாறு,
தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலை மற்றும் அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்ததை தட்டி கேட்டதால் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களால் தாக்கப்பட்டனர்.
இதன் எதிரொலியாக நேற்றுமுன்தினம் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகாக்களை சேர்ந்த மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலை மற்றும் அதிவேக என்ஜின் பயன்படுத்துவதை தடுக்கக்கோரி தரங்கம்பாடியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட 20 மீனவ கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழையாறு, திருமுல்லைலவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திர பாடி, சின்னூர்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் தடையை மீறி சுருக்குமடி வலை மற்றும் அதிவேக விசை படகுகளை மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனை பயன்படுத்துவதை தடுக்கக்கோரியும், தடையை மீறி பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதில் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, கொடியம்பாளையம், பழையாறு, சின்னகொட்டாய்மேடு, கூழையாறு, தொடுவாய், கீழமூவர்க்கரை, மேலமூவர்க்கரை, சாவடிக்குப்பம், நாயக்கர்குப்பம், மடத்துகுப்பம், புதுக்குப்பம், வானகிரி ஆகிய 20 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மீனவர்கள் மனித சங்கிலியாக கை கோர்த்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மீன்வளத்துறை இணை இயக்குனர் நடராஜன், மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி, தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அங்கு சென்றனர்.
அப்போது மீனவர்கள், துணை இயக்குனர் மற்றும் உதவி கலெக்டரை மண்எண்ணெய் கேனுடன் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கும், மீனவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது மீனவர் ஒருவரின் கையில் இருந்த கொடியில் கட்டப்பட்டு இருந்த இரும்பு குழாய், பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வத்தின் மண்டையில் தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. இதில் காயமடைந்த அவரை உடனடியாக பொறையாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், கலெக்டர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால்தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த கலெக்டர் பிரவீன்நாயர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அவர்கள், தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.
மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 750 விசைப்படகுகள் மற்றும் 4 ஆயிரம் பைபர் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தரங்கம்பாடியில் பதற்றமான சூழல் நிலவியதால் தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களுக்கு ஆதரவாக நேற்று தரங்கம்பாடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

Related Tags :
Next Story