4 போலீசார் உள்பட மேலும் 36 பேருக்கு கொரோனா; திறக்கப்பட்ட போலீஸ் நிலையம் மீண்டும் மூடப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 போலீசார் உள்பட மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 570 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 184 பேர் சிகிச்சையில் உள்ளனர். 378 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் 132 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று உறுதி செய்யப்பட்ட 36 பேரில் 4 போலீசாரும் அடங்குவார்கள்.
இவர்கள் புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மற்ற போலீசாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த போலீஸ் நிலையத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, போலீஸ் நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து நேற்றுகக காலை தான் அந்த போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த போலீஸ் நிலையத்தை சேர்ந்த மேலும் 4 போலீசாருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, காலையில் திறக்கப்பட்ட போலீஸ் நிலையம் மதியம் மூடப்பட்டது.
அரிமளம் ஒன்றியத்தில் கே.புதுப்பட்டி, கடியாபட்டி, கும்மங்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்னை, குவைத், அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Related Tags :
Next Story