திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் நேற்று ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போயம்பாளையத்தை அடுத்த கங்காநகர் பகுதியில் உள்ள பேக்கரியின் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சூதாட்ட கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் உள்பட 8 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story