கொரோனா பாதித்த கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் தவிப்பு


கொரோனா பாதித்த கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் தவிப்பு
x
தினத்தந்தி 13 July 2020 5:20 AM IST (Updated: 13 July 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்த 20 வயது நிறைமாத கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது நேற்று காலை 9 மணிக்கு உறுதி செய்யப்பட்டது.

உத்தமபாளையம்,

கர்ப்பிணியிடம் மதியம் ஒரு மணிக்கு ஆம்புலன்ஸ் வரும், தயாராக இருங்கள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இரவு 8 மணி ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அந்த கர்ப்பிணி தவிப்படைந்து உள்ளார்.

அந்த கர்ப்பிணிக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் அழைத்துச் செல்லாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story