மாவட்ட செய்திகள்

விபத்தில் உயிரிழந்த உதவி பேராசிரியர் குடும்பத்துக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு: சென்னை கோர்ட்டு உத்தரவு + "||" + Rs 48 lakh compensation for the family of an assistant professor who died in an accident: Chennai court order

விபத்தில் உயிரிழந்த உதவி பேராசிரியர் குடும்பத்துக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு: சென்னை கோர்ட்டு உத்தரவு

விபத்தில் உயிரிழந்த உதவி பேராசிரியர் குடும்பத்துக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு: சென்னை கோர்ட்டு உத்தரவு
விபத்தில் உயிரிழந்த உதவி பேராசிரியர் குடும்பத்துக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

சென்னையைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 47). கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2014-ம் ஆண்டு கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேசுவரி, விபத்தில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்துக்கு ரூ.48 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.