கொரோனா தடுப்பு நடவடிக்கை: கவுண்டங்கொல்லி ஆதிவாசி கிராமத்துக்கு ‘சீல்’


கொரோனா தடுப்பு நடவடிக்கை: கவுண்டங்கொல்லி ஆதிவாசி கிராமத்துக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 13 July 2020 4:06 AM GMT (Updated: 13 July 2020 4:06 AM GMT)

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்டது கவுண்டங்கொல்லி ஆதிவாசி கிராமம். இங்கு 38 வயது கர்ப்பிணி பிரசவத்துக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கூடலூர்,

சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக கவுண்டங்கொல்லி ஆதிவாசி கிராமத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.

அங்குள்ள ஆதிவாசி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த கிராமத்துக்கு செல்லும் சாலையும் தடுப்பு வைத்து, மூடப்பட்டு உள்ளது. இது தவிர பேரூராட்சி செயல் அலுவலர் வேணுகோபால் தலைமையிலான ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது.

Next Story