ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கொரோனாவுக்கு 8 பேர் பலி புதிதாக 72 பேருக்கு தொற்று
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,774 ஆக இருந்தது. இந்தநிலையில் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 20 பேரும், பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 9 பேரும், ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளில் 5 பேரும், ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 6 பேர் உள்பட 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,826 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கமுதி கிருஷ்ணா தெருவை சேர்ந்த 68 வயது பெண், மீசல் பகுதியை சேர்ந்த 83 வயது நபர், பார்த்திபனூர் பள்ளிவாசல்தெருவை சேர்ந்த 60 வயது பெண், பரமக்குடி 75 வயது நபர், 69 வயது நபர் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லல் அரண்மனை சிறுவயலை சேர்ந்த 70 வயது ஆண், இளையான்குடி துகவூரை சேர்ந்த 63 வயது ஆண், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த 75 வயது ஆண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Tags :
Next Story