ஒரே நாளில் போலீசார் உள்பட 117 பேருக்கு கொரோனா; 2 போலீஸ் நிலையங்கள் மூடல்
கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் போலீசார் உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. துடியலூர், சூலூர் ஆகிய 2 போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. துடியலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு போலீஸ் ஏட்டுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் உள்பட 22 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பெண் போலீஸ் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அந்த போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
கோவையை அடுத்த சூலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் ஒருவர் தினமும் கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடர்பான பணிகளை கவனித்து வந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக சூலூர் போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் கொரோனா பாதித்த போலீஸ்காரருடன் பணியாற்றிய மற்ற 40 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் துடியலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு கொரோனா பாதித்ததால் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து அது திறக்கப்பட்டது. இந்த நிலையில் 5 போலீசாருக்கு கொரோனா பாதித்ததால் அந்த போலீஸ் நிலையம் 2-வது முறையாக நேற்று மீண்டும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், கோவை சாரமேடு இலாஹி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 55 வயது ஆண், 48, 25 வயது பெண்கள், 6 வயது, 2 வயது சிறுமிகள் ஆகிய 5 பேருக்கும், நேரு நகரை சேர்ந்த 30 வயது ஆண், 21 வயது பெண், குறிச்சிப்பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 46 வயது ஆண், 26 வயது பெண், 2 வயது சிறுவன், உக்கடம் கே.ஜி.வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பெண்கள், 3 ஆண்கள், கெம்பட்டிகாலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்கள், 1 பெண் செல்வபுரம் சாமி ஐயர் வீதியிலுள்ள நகைப்பட்டறையில் பணியாற்றி வரும் 4 ஆண்கள், ஒரு பெண், கணபதி மாநகரை சேர்ந்த 3 ஆண்கள், 3 பெண்கள் ஆகியோருக்கு கொரோ னா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிறுமுகை மூலத்துறை 34 வயது நபர், சிறுமுகை நால்ரோடு பகுதி 46 வயது நபர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப்பகுதி தடுப்புகளால் அடைக்கப்பட்டன. இது தவிர பீளமேடு, ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், பூ மார்க்கெட், பொன்னையராஜபுரம், சரவணம்பட்டி, காந்திபுரம், பிரஸ் காலனி, தண்ணீர்பந்தல், தெலுங்குபாளையம், கோவில்மேடு, உடையாம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், போத்தனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஒரேநாளில் 41 ஆண்கள், 76 பெண்கள் என மொத்தம் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோவையில் இதுவரை தினசரி கொரோனா பாதிப்பு நூற்றுக்கும் குறைவாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,261 ஆக உயர்ந்து உள்ளது. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள், 4 சிறுவர்கள் சேர்த்து மொத்தம் 49 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

Related Tags :
Next Story