நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா; பாதிப்பு 222 ஆக உயர்வு


நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா; பாதிப்பு 222 ஆக உயர்வு
x
தினத்தந்தி 14 July 2020 9:09 AM IST (Updated: 14 July 2020 9:09 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 222 ஆக உயர்ந்து உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதாவது ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட காரக்கொரையில் நடந்த நிகழ்ச்சியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் நபர் கலந்து கொண்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த காரக் கொரையை சேர்ந்த 75 வயதான மூதாட்டி, 48 வயதான ஆண், 62 வயதான முதியவர், 39 வயதான பெண், 54 வயதான பெண், 65 வயதான மூதாட்டி, 33 வயதான பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

தங்காடு ஓரநள்ளியில் வசிக்கும் நபருடன் தொடர்பில் இருந்த இத்தலார் பேலிதளாவை சேர்ந்த 60 வயதான பெண், கடநாடு பகுதியை சேர்ந்த 45 வயதான பெண், 24 வயதான ஆண், ஓரநள்ளியை சேர்ந்த 60 வயதான பெண், 50 வயதான பெண், 63 வயதான ஆண், 32 வயதான ஆண், 53 வயதான ஆண், 55 வயதான ஆண், முள்ளிகூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான பெண், 29 வயதான பெண், 25 வயதான ஆண், 7 வயதான சிறுவன், நடுமுட்டியை சேர்ந்த 62 வயதான முதியவர், எப்ப நாட்டைச் சேர்ந்த 60 வயதான பெண், மஞ்சூரை சேர்ந்த 32 வயதான பெண், 36 வயதான பெண், 27 வயதான பெண், 34 வயதான பெண், பெங்கால் மட்டத்தை சேர்ந்த 42 வயதான பெண், ஊட்டி அப்பர் பஜாரை சேர்ந்த 51 வயதான ஆண், தொட்டணியை சேர்ந்த 28 வயதான ஆண், ஹாலட்டியை சேர்ந்த 42 வயதான பெண் ஆகியோர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேல் கவ்வட்டியை சேர்ந்த 42 வயதான ஆண், 30 வயதான ஆண், ஊட்டி ஸ்டேட் பேங்க் லைன் பகுதியை சேர்ந்த 48 வயதான ஆண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த 23 வயதான இளம்பெண், ஊட்டி விவேகானந்த நகரைச் சேர்ந்த 21 வயதான ஆண், எல்லநள்ளி அருகே அட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்த 42 வயதான ஆண், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று வந்த ஊட்டி டேவிஸ் டேல் பகுதியை சேர்ந்த 30 வயதான ஆண், திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று வந்த டேவிஸ் டேல் பகுதியை சேர்ந்த 24 வயதான ஆண், கோவை மாவட்டத்திற்கு சென்று வந்த தொரையட்டியை சேர்ந்த 30 வயதான ஆண் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

இந்த நிலையில் நீலகிரியில் வைரஸ் பாதிப்பு 222 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 93 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 128 பேர் ஊட்டி, கோவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் அத்தியாவசிய மருத்துவ தேவைகளை தவிர்த்து, வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார். 

Next Story