மற்ற ரெயில்கள் ஓடத் தொடங்கும் போது மதுரை-உசிலம்பட்டி இடையேயும் ரெயில் சேவை தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு
மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு ஏலக்காய் மூடைகளை ஏற்றி வருவதற்காக ரெயில் பாதை திட்டம் ஆங்கிலேயர் காலத்தில் தயாரிக்கப்பட்டது.
ரெயில் பயணம் என்பது அனைவருக்கும் இனிமையான ஒன்று. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்காகவும், வணிக நோக்கிலும் ரெயில் பாதை போடப்பட்டது.
அதன்படி, மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு ஏலக்காய் மூடைகளை ஏற்றி வருவதற்காக ரெயில் பாதை திட்டம் ஆங்கிலேயர் காலத்தில் தயாரிக்கப்பட்டது.
இதற்காக 1916-ல் பணிகள் தொடங்கப்பட்டு, 1926-ல் நடைமுறைக்கு வந்தது. 1926-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த தடத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு, காலப்போக்கில் பயணிகள் ரெயிலும் இயக்கப்பட்டது.
மதுரையில் இருந்து போடிக்கு முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்தை அப்போதைய சென்னை மாகாணத்தின் வருவாய்த்துறை செயலாளர் நார்மன் மேஜரிபேங்க்ஸ் தொடங்கி வைத்தார்.
இந்த தடத்தில் நாகமலை, செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, வல்லாந்திரோடு, தேனி, பூதிப்புரம் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன. பின்னர், மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக இந்த பாதையில் இயக்ப்பட்டு வந்த மீட்டர்கேஜ் ரெயில் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
மதுரை-போடி இடையேயான 90 கி.மீ. அகலரெயில்பாதை திட்டத்துக்கு அப்போது ரூ180 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், 2011-ம் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் ரூ.15 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. 2012-ம் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.5 கோடிதான் ஒதுக்கப்பட்டது. பின்னர் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்ததை தொடர்ந்து 2016-ம் ஆண்டு ரூ.330 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
இதில் முதல்கட்டமாக மதுரை-உசிலம்பட்டி இடையே 37 கி.மீ. தூரம் ஒரு பகுதியாகவும், உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி இடையே 21 கி.மீ. தூரம் ஒருபகுதியாகவும், ஆண்டிப்பட்டி-போடிநாயக்கனூர் இடையே மற்றொரு பகுதியாகவும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வந்தன. மதுரை-உசிலம்பட்டி இடையேயான முதற்கட்ட பணிகள் முடிந்து கடந்த ஆண்டு இறுதியில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சோதனை ஓட்டம் நடத்தி, மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கலாம் என சான்று வழங்கினார்.
உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி இடையேயான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பாதையில் ஆண்டிப்பட்டி கணவாய் ரெயில்வே துறையினருக்கு சவாலாக அமைந்தது. இந்த கணவாயை குடைந்துதான் ரெயில்பாதை அகலப்படுத்த வேண்டியிருந்தது. இதற்காக வெடிமருந்துகள், ராட்சதகிரேன்கள் பயன்படுத்தப்பட்டு, கணவாய் அகலப்படுத்தப்பட்டது. இதற்காக கணவாயில் 7 மீட்டர் அகலம் இருந்த தரைத்தளம் 12 மீட்டராக அகலப்படுத்தப்பட்டது. கணவாயின் மேல்புறம் 16 மீட்டரில் இருந்து 24 மீட்டராக உயர்த்தப்பட்டது. இதற்காக மலையை குடையும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இதற்கிடையே கொரோனா ஊரடங்கால் 45 நாட்கள் வரை அகல ரெயில் பாதை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த பணிகள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து முழுவீச்சுடன் தொடங்கி நடந்து வருகிறது. அதற்கடுத்து தேனிக்கு அருகே குன்னூரில் வைகை ஆற்றுப்பாலம் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கொரோனாவால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை அனைத்து வழித்தடங்களிலும் நீண்ட நாட்களாக முடங்கி கிடக்கிறது. இருந்தாலும், கூடிய விரைவில் சாத்தியக்கூறுகளை பொறுத்து மற்ற வழித்தடங்களில் விரைவில் ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் மதுரை-போடி இடையேயான தடத்தில் உசிலம்பட்டி வரை உள்ள பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளன.
உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி இடையே வருகிற செப்டம்பர் மாதத்துக்குள்ளும், ஆண்டிப்பட்டி-போடி இடையேயான பணிகள் அக்டோபர் மாதத்துக்குள்ளும் நிறைவு பெறும் என்று தென்னக ரெயில்வே கட்டுமானப்பிரிவினர் தெரிவிக்கின்றனர். எனவே மற்ற ரெயில்கள் ஓடத் தொடங்கும் போது, மதுரை -உசிலம்பட்டி இடையே ரெயில்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை இப்போதே ரெயில்வே அதிகாரிகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழாமல் இல்லை.

Related Tags :
Next Story