நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று; பாதிப்பு 258 ஆக உயர்வு


நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று; பாதிப்பு 258 ஆக உயர்வு
x
தினத்தந்தி 15 July 2020 2:27 AM GMT (Updated: 15 July 2020 2:27 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 222 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 2 பேரின் பட்டியல் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 220 ஆக இருந்தது.


ஊட்டி,

நேற்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் சவுதி அரேபியாவிலிருந்து கேரளா வழியாக வந்த கூடலூரை சேர்ந்த 35 வயதான ஆண், 27 வயதான பெண், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கேரளா வழியாக வந்த பந்தலூரை சேர்ந்த 35 வயதான ஆண் ஆகியோருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நீலகிரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு 258 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 107 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு வைரஸ் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று உறுதியானது. அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story