தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி, தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செங்கேணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45). கார் டிரைவர். மது குடிக்கும் பழக்கம் உடையவர். நேற்றுமுன்தினம் அவரது மகள்கள் 3 பேரும் வெளியே சென்று விட்டனர். அவர்களில் ஒரு மகள் வீடு திரும்பிய போது தந்தை சிவகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தந்தையை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு சிவகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து எதற்காக சிவகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story