கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் என்பது தவறான தகவல் அமைச்சர் காமராஜ் பேட்டி
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டதாக கூறுவது தவறான தகவல் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த மடிகை மற்றும் மூர்த்தியம்பாள்புரம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலைமண்டல மேலாளர்(பொறுப்பு) சிற்றரசு, துணை மேலாளர் பன்னீர்செல்வம், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சீனிவாசன், பால்வள தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ரமேஷ், தாசில்தார்கள் வெங்கடேசன், அருள்ராஜ், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேட்டூர் அணை திறப்பு
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார். அந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு தேவையான நேரங்களில், தேவையானதை வழங்கி வருகிறார். குறிப்பாக மேட்டூர் அணையை 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்காக குறிப்பிட்ட தேதியில் முதல்-அமைச்சர் திறந்துள்ளார். 306 நாட்கள் 100 அடி தண்ணீர் இருந்தது வரலாற்று ஆண்டாக பார்க்கப்படுகிறது.
ரூ.5 ஆயிரம் கோடி
விவசாயிகளுக்கு தேவையான மும்முனை மின்சாரத்தை கோடை சாகுபடிக்கு வழங்கியதால், எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் விவசாயம் நடந்தது. இந்த ஆண்டு இதுவரை 26 லட்சத்து 69 ஆயிரத்து 167 டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நெல்கொள்முதல் வரலாற்றில் மைல் கல். 28 ஆயிரம் டன் வரை கொள்முதலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 4 லட்சத்து 29 ஆயிரத்து 598 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். ரூ.5 ஆயிரத்து 48 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஊக்கத்தொகை மட்டும் ரூ.168 கோடியே 93 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா முழுவதும் 412 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 83 நெல் கொள்முதல் நிலையங்களும் என 495 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் கொள்முதல் நடந்து வருகிறது. ஏதாவது புகார்கள் வந்தால் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேவைப்படும் இடங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிடுவார்கள்.
தவறான செய்தி
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்கள் வழங்க வேண்டாம் என யாரும் அறிவிக்கவில்லை. இது தவறான செய்தி. கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய தண்ணீரை தர வேண்டும் என உத்தரவு உள்ளது. எனவே அவர்கள் நிச்சயம் கொடுத்துத்தான் தீர வேண்டும். அதற்காக தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நல்ல மழை பெய்து வருவதால், தண்ணீர் பிரச்சினை வர வாய்ப்பில்லை. விவசாயிகள் கவலையில்லாமல் சாகுபடியை செய்யலாம். விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கடைமடை வரை சென்று விட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்படாது
சசிகலா வெளியே வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என கேட்கிறீர்கள். இல்லாத ஒரு தகவலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் தெளிவாக சொல்லுகிறேன், கட்சியின் பொதுக்குழு, செயற்குழு எடுத்த முடிவின் அடிப்படையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் செம்மையாக வழிநடத்தி செல்லுகிறார்கள்.
அதில் எந்தவித மாற்றுகருத்திற்கும் இடமில்லை. எந்த ஆட்சி மாற்றமும் ஏற்படாது. இது ஜெயலலிதாவின் ஆட்சி. யாராலும் இந்த ஆட்சியை எதுவும் செய்யமுடியாது. தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் இரண்டாவது கருத்துக்கள் என்பது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story