குமரியில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு
நாகர்கோவிலில் நடந்த குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் ரூ.1 கோடியே 10 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை செயல்படுத்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணைத்தலைவர் சிவகுமார், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, பரமேஸ்வரன், அம்பிளி, லூயிஸ், ஜோபி, செலின்மேரி, ஷர்மிலா ஏஞ்சல், ராஜேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வளர்ச்சி பணிகள்
கூட்டத்தில் மே, ஜூன் மாத செலவினங்கள் அங்கீகரிக்கப்பட்டது. மாவட்ட பஞ்சாயத்து பொது நிதியில் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்த மன்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சத்தியஜோஸ், வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கிக்கூறி, விவசாயிகள் இந்த திட்டங்கள் மூலம் பயன்பெற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தடையில்லா சான்று
பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் (பொறுப்பு) அருள்சன்பிரைட் பொதுப்பணித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை எடுத்து கூறினார். அவரிடம் மாவட்ட கவுன்சிலர்கள், வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தடையில்லா சான்று விரைவாக வழங்க கேட்டுக்கொண்டனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாவட்ட அதிகாரிக்கு பதிலாக கண்காணிப்பாளர் கூட்டத்தில் பங்கேற்றார். அவரிடம் கவுன்சிலர்கள், கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட உயர் அதிகாரிகள்தான் மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக கீழ்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினர். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story