மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தர்மபுரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவருடைய சிலைக்கு காங்கிரஸ், த.மா.கா. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தர்மபுரி,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தர்மபுரி நகர காங்கிரஸ் சார்பில் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு நகர தலைவர் செந்தில்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னாள் நகர தலைவர் தகடூர் வேணுகோபால் இனிப்பு வழங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேஸ்வரா, நிர்வாகிகள் வேடியப்பன், மாதுசாமி, சேகர், ராஜா, நடராஜ், ஜெய்சங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று அரூரில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கினார். இதில் வட்டார தலைவர் சுபாஷ், நகர தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர்கள் வேடியப்பன், சுகுமார், நிர்வாகிகள் முனுசாமி, சுந்தரம், ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தர்மபுரியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் புகழ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியின் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் முககவசங்களை வழங்கினார். இதில் நகர தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் ராமநாதன், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் பாபு, மகளிர்அணி நிர்வாகி கலையரசிதயாளன், நிர்வாகிகள் ஸ்ரீதர், கோவிந்தன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூர் அருகே உள்ள வீரகவுண்டனூரில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தர்மபுரி மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கி காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் நாகராஜ், நாசர், ராமலிங்கம், முருகன், ராஜா, செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அரூர் அடுத்துள்ள ஈச்சம்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அவருடைய சிலைக்கு வட்டார தலைவர் வஜ்ஜிரம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இளவரசன், ஆறுமுகம், கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொன்னேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட தலைவர் ஜானகிராமன் தலைமையில் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சாக்கன்சர்மா, வேடியப்பன், ஞானசுடர், கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அரூர் கச்சேரிமேட்டில் காமராஜரின் உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட தலைவர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலைமணி, ரஜினி, சரவணன், சாமிகண்ணு, பெரியசாமி, சொக்கலிங்கம், ராமன், சுரேஷ், குழந்தைவேலு, மதுசூதனன் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story