திருவோணம் வடக்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம்


திருவோணம் வடக்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம்
x
தினத்தந்தி 17 July 2020 8:55 AM IST (Updated: 17 July 2020 8:55 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தெற்கு மாவட்டம் திருவோணம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக்கு அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை தெற்கு மாவட்டம் திருவோணம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக்கு அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருவோணம் வடக்கு ஒன்றிய செயலாளராக ஆர்.சத்தியமூர்த்தி, ஒன்றிய அவை தலைவராக ஆர்.ராமையா, ஒன்றிய இணை செயலாளராக ஆர்.அலமேலு, ஒன்றிய துணை செயலாளர்களாக எஸ்.அன்பரசி, ஆர்.நாகராஜ், ஒன்றிய பொருளாளராக எம்.கண்ணதாசன், மாவட்ட பிரதிநிதிகளாக வே.ராசு, சி.குணசேகரன், கே.சுசிலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் திருவோணம் தெற்கு ஒன்றிய செயலாளராக வெட்டுவாக்கோட்டை ஊராட்சி தலைவர் வி.ஆர்.மதியழகன், ஒன்றிய அவைத்தலைவராக புரட்சிகருப்பையா, ஒன்றிய இணைச்செயலாளராக ப.கலையரசி, ஒன்றிய துணைச்செயலாளர்களாக ப.ரெத்தினம், பி.வெங்கிடாசலபதி, ஒன்றிய பொருளாளராக ஆர்.கலியபெருமாள், மாவட்ட பிரதிநிதிகளாக எஸ்.நடராஜன், மு.திலகம், எம்.ரெங்கசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி.யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

Next Story