அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 July 2020 7:05 AM IST (Updated: 18 July 2020 7:05 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி,

தேனி பங்களாமேட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்தும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தேனி நகர செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் கம்பம் பழைய தபால் நிலையம் அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகரச்செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். கம்பம் ஒன்றியப்பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

Next Story