மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம்


மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 18 July 2020 7:22 AM IST (Updated: 18 July 2020 7:22 AM IST)
t-max-icont-min-icon

மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, விவசாயிகள் நலச்சங்க தலைவர் சேதுராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து விவசாயிகள், பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. 

Next Story