அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே உள்ள அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான வெடி மருந்து தொழிற்சாலைசெயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுபடுத்த சமூக இடைவெளி அவசியம் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.ஆனால் வெடி மருந்து தொழிற்சாலையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் அதிக தொழிலாளர்களை கொண்டு பணி நடைபெறுவதாக அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சி.எப்.எல். யு.ஐ.என்.டி.யு, சி.டி.எப்.எல்.யு ஆகிய தொழிற்சங்கங்களின் போராட்ட கூட்டு குழுவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் நோய் தொற்று அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
நேற்று முன்தினம் மாலை போராட்ட கூட்டு குழுவினரை வெடி மருந்து தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய்வாக்குலு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் பொது மேலாளரோடு உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியம், பாதுகாப்பு அதிகாரி கணேசன், போராட்ட கூட்டு குழு சார்பில் தலைவர் ஜோஷி லாசர், நிர்வாகிகள் திலிப் குமார், ரவி, ஹரிகரகிருஷ்ணன், சாந்தகுமார், வெங்கடேஷ்வரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போராட்ட கூட்டு குழு சார்பில் தொழிலாளர்களின்கோரிக்கைகள் குறித்து தமிழில் பேசினர். தொழிற்சாலை பொது மேலாளர் தமிழில் பேசினால் நான் எழுந்து சென்று விடுவேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போராட்ட குழு நிர்வாகிகள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
தர்ணா போராட்டம்
இதனை தொடர்ந்து தமிழில் பேசாத பொது மேலாளரை கண்டித்து போராட்ட கூட்டு குழுவின் சார்பில் நேற்று அருவங்காடு மெயின் கேட்டில் கொட்டும் மழையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு கூட்டுக் குழுத் தலைவர் ஜோசிலாசர் தலைமை தாங்கினார்.போராட்டத்தில் பொது மேலாளரை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் கூட்டு குழு நிர்வாகிகள் திலிப் குமார், ரவி, ஹரிகரகிருஷ்ணன்,சாந்தகுமார், வெங்கடேச வர ராவ் உட்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டபோது நிர்வாகம் சார்பில் அதிகாரி சங்கர் கூறியதாவது:-
அவமதிக்கவில்லை
தொழிற்சாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. மத்திய,மாநில அறிவுறுத்தல் படி கை கழுவுதல், போன்ற வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. தொழிலாளர் நல கூட்டத்தில் பொது மேலாளர், நேரம் குறைவாக இருப்பதால் ஆங்கிலத்தில் பேசினால் விரைவில் முடிவு எடுக்க முடியும் என்று கூறினார். மேலும் பொது மேலாளர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர் ஆவார். அவருக்கு தமிழ் தெரியவில்லை. மேலும் மொழிமாற்றம் செய்யும் வசதியும் இல்லை. இதனால் தான் பொது மேலாளர் பதில் கூற முடியவில்லை. ஆகவே அவர் தமிழை அவமதிக்கவில்லை.
இவ்வாறுஅவர் கூறினார்.

Related Tags :
Next Story