நாகர்கோவிலில் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு


நாகர்கோவிலில் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 18 July 2020 9:43 AM IST (Updated: 18 July 2020 9:43 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு.

நாகர்கோவில்,

கந்தசஷ்டி கவசம் தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக வலைதளத்தில் பரவின. அதை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் கோவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெரியார் சிலையை யாரோ மர்ம நபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அதே போல குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு வடசேரி போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும் அவ்வப்போது ஒழுகினசேரி சென்று பெரியார் சிலைக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.


Next Story