குமரியில் மேலும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,383ஆக உயர்வு

குமரி மாவட்டத்தில் மேலும் 103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,383 ஆக உயர்ந்து இருக்கிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நோய் வேகமாக பரவி வருவதால் நோய் பாதித்தவர்களை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நோய் பாதித்தவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 2,280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று இரவு வரை மேலும் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 52 பேர் ஆண்களும், 43 பேர் பெண்களும், 8 குழந்தைகளும் அடங்குவர்.
பயிற்சி டாக்டர்கள்
இவர்கள் அனைவரும் நாகர்கோவில், தூத்தூர், ராஜாக்கமங்கலம், குளச்சல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு நோய்த்தொற்று எப்படி வந்தது என்று சரிவர தெரியவில்லை.எனினும் பயிற்சி டாக்டர்களுடன் தொடர்பில் இருந்த சக பயிற்சி டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை
இதையடுத்து பாதிக்கப்பட்ட 103 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், கொரோனா கவனிப்பு மையங்களிலும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். அதாவது நோய்த்தொற்று அதிகமாக காணப்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், நோய்த்தொற்று குறைவாக இருந்தவர்கள் கொரோனா கவனிப்பு மையங்களிலும் அனுமதிக்கப்பட்டனர்.குமரி மாவட்டத்தில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்ட 103 பேருடன் சேர்த்து நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2383 ஆக உயர்ந்து உள்ளது. பரிசோதனைகள் அதிகமாக நடந்து வருவதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் ஏட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

Related Tags :
Next Story