கொரோனா தடுப்பு பணிகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு


கொரோனா தடுப்பு பணிகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 20 July 2020 7:08 AM IST (Updated: 20 July 2020 7:08 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி,

தேனி மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேனி, போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு பணிகளை பார்வையிட்டார். மேலும், மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கான பாதுகாப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கொரோனா நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது, சுகாதார பாதுகாப்பு, மக்களிடம் இணக்கமாக பாதுகாப்பு பணி மேற்கொள்வது தொடர்பாக போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உடன் இருந்தார்.

Next Story