முழு ஊரடங்கால் நாகை, திருவாரூர் வெறிச்சோடியது கடைகள் அடைப்பு; தேவையின்றி சாலையில் திரிந்தவர்களுக்கு அபராதம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாகை, திருவாரூரில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடின. மேலும் சாலையில் தேவையின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
திருவாரூர்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாகை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாகையில் மருந்துகடைகள், பால் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. நாகை கடைத்தெரு, நீலா விதிகள், புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நாகை மாவட்டத்தில் நேற்று 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.
மீன் விற்பனை
சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதேபோல் நாகை நகரம், வேளாங்கண்ணி, திருமருகல், கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள எல்லா கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. நாகையில் காலை நேரங்களில் திறக்கப்பட்ட சில கடைகளை மூடும்படி நகராட்சி பணியாளர்களும், போலீசாரும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அந்த கடைகளும் மூடப்பட்டன. முழு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் வகையில் நாகை அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் மீன் விற்பனை நடைபெறவில்லை.
சீர்காழி
சீர்காழியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு, கொள்ளிடம் கூட்டு மயிலாடுதுறை சாலை, சிதம்பரம் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை உணவு விடுதி இறைச்சி கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடின. மயிலாடுதுறை பகுதியிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி அத்தியாவசிய பொருட்களான காய்கறி மற்றும் மளிகை விற்பனை செய்யும் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இறைச்சி, மீன் கடைகளும் மூடப்பட்டன. ஓட்டல்கள் அடைக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து திருவாரூர் வந்து தங்கி வேலை பார்பவர்கள் சிரமப்பட்டனர். கடைவீதி, பழைய பஸ் நிலையம், நகைக்கடை சந்து, தெற்குவீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆட்டோ, கார், வேன் என அனைத்து வாடகை வாகனங்களும் ஓடவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. மிக அவசர தேவையான மருத்து கடைகள், மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டன. ஊடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் திருவாரூர் தாசில்தார் நக்கீரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகுமரன் மற்றும் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மருந்துகடைகள் வழக்கம்போல் இயங்கின. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதேபோல நன்னிலத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன.

Related Tags :
Next Story