மாவட்ட செய்திகள்

நினைவுநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கு.தங்கமுத்து படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி + "||" + Former MLA Tribute to K. Thangamuthu by wearing an evening gown

நினைவுநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கு.தங்கமுத்து படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி

நினைவுநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கு.தங்கமுத்து படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி
நினைவுநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கு.தங்கமுத்து படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்,

அ.தி.மு.க. மாநில விவசாய பிரிவு முன்னாள் செயலாளரும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கு.தங்கமுத்துவின் 5-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று தஞ்சையில் நடைபெற்றது. நினைவுநாளையொட்டி தஞ்சை ராஜப்பா நகர் 2-ம் தெருவில் உள்ள கு.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு அவருடைய மூத்த மகனும், கு.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை தலைவருமான டாக்டர் தங்க.கண்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் ஏழை-எளியோருக்கு காலை உணவு வழங்கினார். இதில் தங்க.கண்ணன் பாசறையை சேர்ந்த வழக்கறிஞர் முத்தமிழ், ஜியாவுதீன், ஜெய்மணி, கார்த்திக், மலேசியா மணி, நாகராஜ், பிரபா, சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மலர் தூவி அஞ்சலி

அதனை தொடர்ந்து தஞ்சை ஆத்துப்பாலம் காந்திஜி சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கு.தங்கமுத்துவின் உருவப்படத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கு.ராஜமாணிக்கம், மாவட்ட துணை மக்கள் தொடர்ப்பு அதிகாரியும், கு.தங்கமுத்துவின் இளைய மகனுமான தங்க. இளமுருகு உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பசுபதி கோவில் முத்து, வளப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், பனைவெளி கோவிந்தசாமி, தஞ்சை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வடக்குப்பட்டு சேகர், வட்ட செயலாளர்கள் வக்கீல் முருகேசன், சிவக்குமார், டி.மனோகர், ராஜா, கோ.வி.மனோகரன், அண்ணா தொழிற்சங்க ஆவின் இணை செயலாளர் கலையரசன், தஞ்சை நகர்-1 அரசு போக்குவரத்து அண்ணா தொழிற் சங்க இணை செயலாளர் ஞான.சம்பந்தம், உளூர் நடராஜன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

இதேபோல் ஒரத்தநாடு அருகே உள்ள கு.தங்கமுத்துவின் சொந்த ஊரான திருநல்லூரில் அவரது உருவப்படத்திற்கு கிராமமக்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் திருநல்லூரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கு.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை தலைவர் டாக்டர் தங்க.கண்ணன் மற்றும் குடும்பத்தினர்கள், டாக்டர் தங்க.கண்ணன் பாசறை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு கரூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்.
2. பேயாக நடிக்கும் அஞ்சலி, யோகிபாபு
பூச்சாண்டி என்ற படத்தில் அஞ்சலி, யோகிபாபு பேயாக நடித்து வருகிறார்கள்.
3. திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு அஞ்சலி
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு அஞ்சலி அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு.
4. வாணியம்பாடியில் அமைச்சர் துரைக்கண்ணு உருவபடத்துக்கு அஞ்சலி
வாணியம்பாடியில் அமைச்சர் துரைக்கண்ணு உருவபடத்துக்கு அஞ்சலி.
5. கொரோனாவால் மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் அடக்கம் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அஞ்சலி
கொரோனாவால் மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடைபெற்றது. அவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை