கொரோனா நோயாளிகளுக்கு தினமும் 5 முறை சத்தான உணவு வழங்க வேண்டும் காங்கிரஸ் கட்சியினர் மனு


கொரோனா நோயாளிகளுக்கு தினமும் 5 முறை சத்தான உணவு வழங்க வேண்டும் காங்கிரஸ் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 21 July 2020 9:11 AM IST (Updated: 21 July 2020 9:11 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு தினமும் 5 முறை சத்தான உணவு வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் மனு.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினருமான ராபர்ட் புரூஸ் தலைமையில், இதர பிற்பட்டோர் பிரிவு மண்டல தலைவர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் வைகுண்டதாஸ், திருத்துவதாஸ், விஜய், மகாதேவன்பிள்ளை, வில்லியம்ஜாண் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் குறைந்தபட்சம் 5 முறை தினமும் சத்தான உணவுகளை வழங்க வேண்டும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி தவிர பிற மையங்களில் தேவையான டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். அந்த மையங்களில் அவசர தேவைக்கு போதுமான வெண்டிலேட்டர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், மானிட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களை வைக்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தினமும் 5 முறை உணவு வழங்க இயலாவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் உணவு வழங்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நாகர்கோவில் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையத்துக்கு சென்று நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்கப் படுகிறதா? என்பது குறித்து அங்குள்ள நோயாளிகளிடமும், அதிகாரிகளிடமும் கேட்டறிந்தனர்.

Next Story