புதிதாக 139 பேருக்கு தொற்று: புதுவையில் மேலும் 3 பேர் உயிரிழப்பு சாவு எண்ணிக்கை 38 ஆனது

புதுச்சேரியில் நேற்று புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் தொற்று பாதிப்பு 2,653 ஆகவும், சாவு எண்ணிக்கை 38 ஆகவும் உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் 775 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 113 பேர், காரைக் காலில் 3 பேர், ஏனாமில் 23 பேர் என மொத்தம் 139 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை மொத்தம் 2,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 பேர், ஜிப்மரில் 19 பேர், கொரோனா கேர் சென்டரில் 14 பேர், காரைக்காலில் 13 பேர் என மொத்தம் 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,561 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து 1,055 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர், ஏனாம் ஆகியவற்றில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். இவர்களில் புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி கொரோனா தொற்று சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் ஆவார்.
மற்றொருவர் வில்லியனூர் கணுவாப்பேட்டையை சேர்ந்த 75 வயது முதியவர் ஆவார். இவர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். இன்னொருவர் ஏனாமை சேர்ந்த 75 வயது முதியவர் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் இருதய பிரச்சினை சம்பந்தமாக அனுமதிக்கப்பட்டவர். இவர்களை சேர்த்து புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் மின்னல் வேகத்தில் தொற்று பரவுகிறது. நானும், துறை செயலர், இயக்குனர் மற்றும் மருத்துவ அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினோம். அதில் தேவையான மருத்துவமனை, படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்த 35 நாட்களுக்கு 10 ஆயிரம் பேருக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று ஜிப்மர் இயக்குனர் மற்றும் மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர்.
இது சம்பந்தமாக நேற்று முதல்-அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன். தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்கள் தரப்பில் இருந்து மேலும் ஒத்துழைப்பு தேவை. தொற்று பரவல் வேகமாக இருந்தால் கூட பலரும் சாலையில் சுற்றுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது.
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு அதிகளவில் தொற்று பரவி வருகிறது. சுகாதாரத்துறை தரப்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆகவே பொதுமக்கள் கொரோனாவை தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story