பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது


பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2020 9:08 PM GMT (Updated: 26 July 2020 9:08 PM GMT)

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்றதாக நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வாங்கி பயன்படுத்திய 12 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில், பானசாவடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நைஜீரியாவை சேர்ந்த சவுக்வூவ்மேகா எலோபி என்ற பிக்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல, ஹெண்ணூர் பகுதியில் கஞ்சா விற்றதாக சிக்கண்ணா லே-அவுட்டை சேர்ந்த ஆனந்த் என்பவரை ஹெண்ணூர் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான ஆனந்திடம் இருந்து 600 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

கஞ்சா பயன்படுத்தி வந்த...

கே.ஜி.ஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஞ்சா விற்பனை செய்ததாக கே.ஜி.ஹள்ளியை சேர்ந்த சையத் நாஜிம் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 3 பேர் மீதும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள் 3 பேரும் செல்போனில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பேசி, அவர்களது வீடுகளுக்கே சென்று போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் கல்லூரி மாணவர்களுக்கும் போதைப்பொருட்கள் விற்றது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 15 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story