அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாளிக்க நடவடிக்கை 24 வாரிய தலைவர்கள் நியமனம் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு
பா.ஜனதாவில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையாக அவர்களுக்கு வாரியத்தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி 24 வாரியங்களுக்கு தலைவர்களை நியமித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
வாரிய தலைவர் பதவி
பா.ஜனதாவை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தனர். அவர்களை எடியூரப்பா சமாதானப்படுத்தி வந்தார். இந்த நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அவர் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியுள்ள உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் வகையில் வாரிய தலைவர் பதவிகளை வழங்கியுள்ளார்.
அதாவது முதல்-மந்திரி எடியூரப்பா, பல்வேறு துறைகளை சேர்ந்த 24 வாரியங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-
பழங்குடியின மேம்பாட்டு...
ராஜ்குமார் பட்டீல் தெல்குர் (சேடம் தொகுதி) வடமேற்கு சாலை போக்குவரத்து கழக தலைவராகவும், தத்தாத்ரேயா பட்டீல் (கலபுரகி தெற்கு) கல்யாண கர்நாடக மேம்பாட்டு வாரிய தலைவராகவும், சங்கர் பட்டீல் (நவலகுந்து) கர்நாடக நகர அடிப்படை வசதிகள் மேம்பாட்டு வாரிய தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்கள். எச்.நாகேஸ் (திப்தூர்) கர்நாடக மாநில தென்னை நார் மேம்பாட்டு கழக தலைவராகவும், எஸ்.வி.ராமச்சந்திரா (ஜகலூரு) மகரிஷி வால்மீகி பழங்குடியின மேம்பாட்டு வாரிய தலைவராகவும், நேரு ஓலேகர் (ஹாவேரி) பாபுஜெகஜீவன்ராம் தோல் தொழில் மேம்பாட்டு வாரிய தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
ஐஹோலே துர்யோதனா மகாலிங்கப்பா (ராய்பாக்) கர்நாடக மாநில காதி மற்றும் கிராமோதயா வாரிய தலைவராகவும், லாலாஜி ஆர்.மெண்டன் (காபு) கர்நாடக பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணைய தலைவராகவும், பசவராஜ் தடேசூர் (கனககிரி) சமூக நல வாரிய தலைவராகவும், சிவராஜ் பட்டீல் (ராய்ச்சூர்) உயிரி எரிபொருள் மேம்பாட்டு வாரிய தலைவராகவும், சி.எஸ்.நிரஞ்சன்குமார் (குண்டலுபேட்டை) வனத்தொழில் கழக தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
வீட்டு வசதி வாரியம்
அரகேக ஞானேந்திரா (தீர்த்தஹள்ளி) கர்நாடக வீட்டு வசதி வாரிய தலைவராகவும், எம்.சந்திரப்பா (ஒலல்கெரே) சாலை போக்குவரத்து அமைப்பு தலைவராகவும், ராஜூகவுடா (சோராப்புரா) நகர நீர் வினியோகம் மற்றும் பாதாள சாக்கடை வாரிய தலைவராகவும், எம்.பி.குமாரசாமி (மூடிகெரே) கர்நாடக மார்க்கெட் கன்சைல்மெண்ட்ஸ் மற்றும் ஏஜன்சீஸ் நிறுவன தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி (முத்தேபிகால்) உணவு மற்றும் பொதுவினியோக கழக தலைவராகவும், எச்.ஹாலப்பா (சாகர்) மைசூரு சேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவன தலைவராகவும், விருபாக்ஷப்பா (சன்னகிரி) கர்நாடக சோப்பு வாரிய தலைவராகவும், ஜி.எச்.திப்பாரெட்டி (சித்ரதுர்கா) தேவராஜ் அர்ஸ் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் வாரிய தலைவராகவும், சிவன்னகவுடா நாயக் (தேவதுர்கா) கர்நாடக சாலை மேம்பாட்டு கழக தலைவராகவும், கலகப்பா பன்டி (ரோண்) கர்நாடக தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு வாரிய தலைவராகவும், பரன்ன முனவள்ளி (கங்காவதி) கர்நாடக நிதி நிறுவன தலைவராகவும், சித்துசவதி (தேரதால்) கர்நாடக கைத்தறி மேம்பாட்டு கழக தலைவராகவும், பிரீத்தம் கவுடா (ஹாசன்) வன விடுதிகள் மற்றும் ரெசார்ட்கள் நிறுவன தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story