பண்ணை வீட்டில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான வாலிபர் யூ டியூப்பை பார்த்து ஷாக் அடிக்கும் கருவி தயாரித்தது அம்பலம்


பண்ணை வீட்டில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான வாலிபர் யூ டியூப்பை பார்த்து ஷாக் அடிக்கும் கருவி தயாரித்தது அம்பலம்
x
தினத்தந்தி 28 July 2020 4:14 AM IST (Updated: 28 July 2020 4:14 AM IST)
t-max-icont-min-icon

பண்ணை வீட்டில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதானவர்கள், யூ டியூப்பை பார்த்து ஷாக் அடிக்கும் மின்சார கருவி தயாரித்து குற்றச்செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை தெற்குப்பட்டு கிராமத்தில் பக்கிங்காம் கால்வாய் ஓரம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்னையை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரின் பண்ணைவீட்டில் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் 3 பேர் சுற்றுச் சுவர் ஏறி குதித்து, அந்த வீட்டின் காவலாளியை தாக்கிவிட்டு, அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர்.

பின்னர் போலீசாரின் பிடியில் சிக்கிய அவர்கள் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கைதான 3 பேரில் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த தினேஷ் (வயது 26) என்வர் யூ டியூப்பை பார்த்து மின்சார ஷாக் அடிக்கும் ‘ஸ்டன்கன்’ என்ற கருவியை தயாரித்து பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து அந்த கருவியை அங்குள்ளவர்களின் உடலில் வைத்து மிரட்டி பணம் பறித்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. எலக்ட்ரிஷியன் வேலை தெரிந்த அவர், பர்மா பஜாரில் இந்த கருவிக்கான உதிரி பாகங்கள் வாங்கி அவரே இந்த கருவியை தயாரித்துள்ளார்.

சிறையில் அடைப்பு

அதிவேக பேட்டரி தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த கருவி உடலில் வைத்து ஸ்விட்ச் ஆன் செய்த உடன் உயர்அழுத்த மின்சாரம் உடலில் பாய்வது போன்று மின்சாரம் தாக்கும். அந்த நேரத்தில் பல இடங்களில் அவர்களை பணிய வைத்து பணம், நகை பறித்தல், பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

தெற்குப்பட்டில் உடன் வந்த பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன்(20), தினேசுடன் சேர்ந்து அந்த பெண்ணை மின்சார ஷாக் வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் பல இடங்களில் இந்த நூதன முறையை பயன்படுத்தி பலரை மின்சார ஷாக் கொடுத்து வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஈடுபட்ட தினேஷ், கார்த்திகேயன் மற்றும் பெரம்பூரை சேர்ந்த மிதுன் (20) ஆகியோர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Next Story