அம்பையில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


அம்பையில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 28 July 2020 4:52 AM IST (Updated: 28 July 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்.

அம்பை,

கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைக்குளத்தை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து, வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றபோது திடீரென்று உயிரிழந்தார். வனத்துறையினர் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், விவசாயியின் மரணத்துக்கு நீதி கேட்டு அம்பை அருகே உள்ள கவுதமபுரியில் முத்தாரம்மன் கோவில் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஊர் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story