மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு + "||" + Public petition to the Collector's Office against the erection of high voltage towers on agricultural land

விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
தூத்துக்குடி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் கூடும் எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்படுவது இல்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் வாரந்தோறும் பொதுமக்களும், அமைப்புகளும் மனுக்களை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டு வருகின்றனர்.


அதன்படி நேற்று காலை முதல் மக்கள் அதிக அளவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களை அங்கு வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் போட்டு சென்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளம் விவசாயிகள், பொதுமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் வசித்து வருகிறோம். அங்கு விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் விவசாய நிலத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகையால் விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்களை அமைக்காமல், மாற்றுப்பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

குடிநீர்

குரும்பூர் அருகே உள்ள புறையூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு தனி குடிநீர் இணைப்பு வழங்க அரசாணை பிறப்பித்த பிறகு புறையூர் கிராமத்தில் போதிய வசதி இல்லை என்று புறக்கணிப்பதாக தெரிகிறது. ஆகையால் எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தனி குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா கட்சி விவசாய அணி தலைவர் துரைராஜ் இளந்துழகன், பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தென்திருப்பேரை மற்றும் சுற்று வட்டாரபகுதிகளில் நெல் அறுவடை நடைபெற தயார் நிலையில் உள்ளன. ஆகையால் இந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர், தலைவர் கண்ணன் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், தமிழ் தேசியம் என்ற பெயரில் தெலுங்கு சமுதாய மக்களை வந்தேறிகள் என்று பேசி, இனம் மற்றும் மொழிரீதியான பிரிவினையை தூண்டி வருகின்றனர். சாதிக்கலவரங்களை உருவாக்கி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் பேசியும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மசினகுடியில் மீன் வளர்ப்பு திட்டம் விரிவுபடுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மசினகுடியில் மீன் வளர்ப்பு திட்டத்தை விரிவுபடுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
2. அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. அம்பேத்கர் நகரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
அம்பேத்கர் நகரில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கலெக்டர் அலுவலகம் கட்ட இடம் கையகப்படுத்த எதிர்ப்பு: பொதுமக்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி
கலெக்டர் அலுவலகம் கட்ட தங்களின் இடத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
5. அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் உயர்மட்ட பாலம் கட்டவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...