மாவட்ட செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட பேத்தி வீடு திரும்பிய போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை அமிதாப் பச்சன் உருக்கம் + "||" + Amitabh Bachchan could not control his tears when his granddaughter returned home from Corona

கொரோனாவில் இருந்து மீண்ட பேத்தி வீடு திரும்பிய போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை அமிதாப் பச்சன் உருக்கம்

கொரோனாவில் இருந்து மீண்ட பேத்தி வீடு திரும்பிய போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை அமிதாப் பச்சன் உருக்கம்
கொரோனாவில் இருந்து குணமடைந்து பேத்தி வீடு திரும்பிய போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என நடிகர் அமிதாப் பச்சன் உருக்கமாக கூறியுள்ளார்.
மும்பை,

இந்தி திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த 11-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த பரிசோதனையில் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் குணமாகி நேற்று முன்தினம் வீடு திரும்பினர். எனினும் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அமிதாப் பச்சன் உருக்கம்

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் முன் ஆராத்யா, தாத்தா அமிதாப் பச்சனை பார்த்து நீங்களும் விரைவில் வீடு திரும்புவீர்கள் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அமிதாப் பச்சன் அவரது வலைதள பக்கத்தில் உருக்கமான தகவலை பதிவிட்டு உள்ளார். அதில் அவர், “சிறியவளும்(பேத்தி), பாகுராணியும்(மருமகள்)... அவர்கள் வீடு திரும்பிவிட்டனர். மகிழ்ச்சி. என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறியவள் அன்புடன், ‘அழாதீங்க நீங்களும் விரைவில் வீடு திரும்புவீர்கள்' என்றாள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...