தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரி சமுதாய ஊர் நாட்டாண்மைகள் எம்.எல்.ஏ.விடம் மனு


தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரி சமுதாய ஊர் நாட்டாண்மைகள் எம்.எல்.ஏ.விடம் மனு
x
தினத்தந்தி 29 July 2020 5:08 AM IST (Updated: 29 July 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரி சமுதாய ஊர் நாட்டாண்மைகள் எம்.எல்.ஏ.விடம் மனு.

பாவூர்சத்திரம்,

தென்காசி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாய ஊர் நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் மேலப்பாவூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாபநாசம் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செல்வ மோகன்தாஸ் பாண்டியனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வேளாண்மையை குலத்தொழிலாக செய்து வரும் தேவேந்திரகுலத்தான், பள்ளன், குடும்பன், காலாடி, வாதியான், பண்ணாடி, கடையர் ஆகிய 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டுமென்று நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். இதையடுத்து பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று எங்கள் துறை வாழ்க்கை முறையை நேரில் விசாரித்து, 7 பிரிவுகளையும் ஒன்றாக இணைக்கலாம் என மானுடவியல் அறிக்கை சுமார் 16 மாதங்களுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஹன்ஸ்ராஜ்வர்மா தலைமையில் குழு அமைத்துள்ளார். இருப்பினும் மேல்நடவடிக்கை ஏதும் இன்றி உள்ளது. எனவே தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிட தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Next Story