கொரோனா கட்டுப்பாட்டு அறையில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு
கொரோனா கட்டுப்பாட்டு அறையில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு.
புதுச்சேரி,
கொரோனா தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் கவர்னர் கிரண்பெடி திடீரென வந்தார். அப்போது அவரை அங்கு இருந்த மாவட்ட கலெக்டர் அருண் வரவேற்று கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கினார். கொரோனா குறித்த தகவல்களை பெறவும், அதிகாரிகளிடையே பகிர்ந்து கொள்ளவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கிரண்பெடி கேட்டறிந்தார்.
இதன்பின் அங்கிருந்த நிருபர்களிடம் கவர்னர் கிரண்பெடி கூறுகையில், ‘பொது சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சிகள், வருவாய்த்துறை ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கும், ஊடகங்களுக்கும் கொரோனா தொடர்பான முழு தகவல்களையும் இந்த அறை மூலம் அளிக்க முடியும். கொரோனா பகுப்பாய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்த அறை மூலம் அறிந்துகொள்ள முடியும்’ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story