மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது + "||" + Cannabis seller arrested for targeting college students

கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது

கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது
கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அரியாங்குப்பம்,

புதுவையில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறப்பதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்கப்படுவதாகவும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. அரியாங்குப்பம், புதுக்குப்பம், வீராம்பட்டினம், நோணாங்குப்பம், மணவெளி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இதையொட்டி போலீஸ் உயர்அதிகாரிகள் உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன், மார்ஸ் அருள்ராஜ், ராஜேஷ் ஆகியோர் கொண்ட தனிப் படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

வாலிபர் கைது

நேற்று முன்தினம் மணவெளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் அவர், அரியாங்குப்பம் சுப்பையா நகர் லெனின் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) என்பதும், விழுப்புரத்தில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூரில் கஞ்சா கடத்திய குடியாத்தத்தை சேர்ந்த 4 பேர் கைது 6 கிலோ கஞ்சா, 4 மோட்டார்சைக்கிள் பறிமுதல்
வேலூரில் கஞ்சா கடத்திய குடியாத்தத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 4 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.17½ கோடிக்கு மது விற்பனை
முழு ஊரடங்கையொட்டி கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.17½ கோடிக்கு மது விற்பனையானது.
3. வேதாரண்யம் அருகே காரில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்
வேதாரண்யம் அருகே காரில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் கடத்தப்பட்ட 19 கஞ்சா பண்டல்கள்- ரூ.90 ஆயிரம் பறிமுதல்
திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 19 கஞ்சா பண்டல்கள், ரூ.90 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்து, சிக்கிய ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.