போலீஸ்தான் லீசுக்கு வீடு பார்த்து தரவேண்டும் என தாயும், மகளும் சாலையில் அமர்ந்து தர்ணா


போலீஸ்தான் லீசுக்கு வீடு பார்த்து தரவேண்டும் என தாயும், மகளும் சாலையில் அமர்ந்து தர்ணா
x

போலீஸ்தான் லீசுக்கு வீடு பார்த்து தரவேண்டும் என தாயும், மகளும் சாலையில் அமர்ந்து தர்ணா.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காட்டை சேர்ந்தவர் அமுதா. இவரது மகள் ரேணுகாதேவி. இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு வீட்டில் லீசுக்கு இருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும், தாங்கள் தங்கி இருக்கும் வீட்டை காலி செய்கிறோம். பணத்தை பெற்று தாருங்கள் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் வீட்டு உரிமையாளரிடம் இருந்து பணத்தை பெற்று கொடுத்தனர். அதன்படி அவர்கள் வீட்டை காலி செய்தனர். தற்போது தங்களுக்கு புதிதாக ஒரு இடத்தில் போலீசார்தான் வீட்டை லீசுக்கு பார்த்து தரவேண்டும். வாடகைக்கு வேண்டாம் என்றும் கூறி தாய், மகள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மாங்காட்டில் பூந்தமல்லி-குன்றத்தூர் சாலையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மற்றும் பொதுமக்கள் சமாதானம் பேசியதால் நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அங்குள்ள சமுதாய கூடத்தில் இருவரையும் தங்க வைத்தனர்.

Next Story